
சமையலறை வேலை என்பது சிலருக்கு கலை, பலருக்கு சுமை. அந்த சுமையைக் கொஞ்சம் குறைக்க, கலையை இன்னும் ரசிக்க சில எளிய வழிகள் உள்ளன. தினமும் நாம் சந்திக்கும் சமையல் சவால்களை சமாளிக்க சில சூப்பர் டிப்ஸ்களை இந்தப் பதிவில் பார்க்கலாம். இந்த குறிப்புகள் உங்கள் சமையல் நேரத்தை மிச்சப்படுத்துவது மட்டுமல்லாமல், உணவின் சுவையையும் மேம்படுத்தும்.
மீதமான சாம்பாரை புதுப்பிக்க:
சாம்பார் மீந்து போனால் கவலையா? அதை வீணாக்காமல் புது சுவையில் மாற்றலாம். கொஞ்சம் எண்ணெயில் கடுகு, சீரகம் தாளித்து, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும். பிறகு, சிறிது சாம்பார் பொடியை தூவி, மீதமான சாம்பாரை ஊற்றி கொதிக்க விடுங்கள். கொத்தமல்லி தழை தூவினால் போதும். நேற்று வைத்த சாம்பாரா இது? என ஆச்சரியப்படும் அளவுக்கு சுவை அபாரமாக இருக்கும். வீணாகும் சாம்பாரை விரும்பும் சாம்பாராக மாற்றி அசத்துங்கள்.
சிக்கன் 65 மென்மையாக இருக்க:
சிக்கன் 65 பிடிக்காதவங்க யாருமே இருக்க முடியாது. ஆனா சில நேரங்கள்ல அது ரொம்ப ஹார்டா வந்துடும். சிக்கன் 65 சாஃப்டா வர ஒரு சின்ன ட்ரிக் இருக்கு. சிக்கன்ல மசாலா, இஞ்சி பூண்டு விழுது, உப்பு எல்லாம் போட்டு நல்லா கலந்துட்டு, கடைசியா அரை ஸ்பூன் சோயா சாஸ் சேருங்கள். ஒரு 15 நிமிஷம் ஊற வச்சி பொரிச்சு பாருங்க, சிக்கன் பஞ்சு போல மென்மையா இருக்கும்.
வாழைப்பழம் வீணாகாமல் இருக்க:
வாழைப்பழம் சீக்கிரம் பழுத்துடுச்சுன்னா ஒரே கவலைதான். பழுத்த வாழைப்பழத்தை தூக்கி போடாம ரொம்ப நாளைக்கு ஃபிரெஷ்ஷா வைக்க ஒரு ஐடியா இருக்கு. வாழைப்பழத்தை சின்ன சின்ன துண்டுகளா வெட்டி ஃப்ரீசர்ல போட்டு வச்சிடுங்க. அவ்வளவுதான், வாழைப்பழம் கெட்டுப் போகாம அப்படியே இருக்கும். ஸ்மூத்தி, மில்க் ஷேக்னு எது வேணுமோ செஞ்சுக்கலாம்.
இந்த எளிய சமையல் குறிப்புகள் உங்கள் அன்றாட சமையலை நிச்சயம் எளிதாக்கும். சமையல் அறையில் நேரம் மிச்சமாவதோடு, உணவு waste ஆகுறதும் குறையும். சமையலை சுமையா நினைக்காம, சந்தோஷமா சமைச்சு அசத்துங்க!