
“மனிதன் தான் புத்திசாலிப் படைப்பு” என்று நாம் மார்தட்டிக் கொண்டாலும், இயற்கையின் விந்தை வேறு விதமாக இருக்கிறது. பூமியில் மனிதர்களை விடவும் சில விலங்குகள் அபார அறிவாற்றல் கொண்டு விளங்குகின்றன என்பது பலருக்கும் ஆச்சரியம் அளிக்கும் உண்மை. ஆம், ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு, அதில் விலங்குகளின் புத்திக்கூர்மை பிரமிக்க வைக்கிறது.
சமீபத்திய ஆய்வுகள், விலங்குகள் நினைத்ததை விடவும் அதிக புத்திசாலித்தனம் கொண்டவை என்பதை நிரூபித்துள்ளன. இந்த ஆய்வுகளின் அடிப்படையில், உலகின் டாப் 10 புத்திசாலி விலங்குகள் பட்டியலை இப்போது காண்போம், இதில் நீங்கள் சற்றும் எதிர்பாராத சில நண்பர்களும் இடம்பெற்றுள்ளனர்.
1. ஒராங்குட்டான். இவை கருவிகளைப் பயன்படுத்துவதில் கில்லாடிகள். மனிதர்கள் போல சைகை மொழி கற்றுக்கொண்டு கலகலவென பேசுவதில் வல்லவர்கள். சிக்கலான சமூக வாழ்க்கை வாழும் இவை, உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வினோத சடங்குகளையும் வைத்துள்ளனவாம்.
2. பாட்டில்நோஸ் டால்பின். டால்பின்களிலேயே இதுதான் டாப் பிரெய்ன். கண்ணாடியில் தன்னைப் பார்த்து ‘அட, இது நாம்தானா?’ என அடையாளம் காணும் திறன் கொண்டது. சங்கேத ஒலிகளை மாற்றி மாற்றி ஒரு சிக்கலான மொழியையே உருவாக்கி சக டால்பின்களுடன் பேசுகிறது இந்த புத்திசாலி.
3. சிம்பன்சி. நம்மோடு 98% மரபணு ஒற்றுமை கொண்ட இந்த சிம்பன்சிகள், கருவிகளைத் தயாரித்து பயன்படுத்துவதில் கில்லாடி. கடினமான விஷயங்களையும் சுலபமாக கிரகிக்கும் திறன் படைத்தவை. அதுமட்டுமல்ல, மனித உதவி இல்லாமல் தங்கள் குட்டிகளுக்கு சைகை மொழியை கற்றுக்கொடுக்கிறதாம் இந்த ஜீனியஸ் குரங்கு.
4. யானை. யானைக்கு ஞாபக சக்தி அதிகம் என்பது பழமொழி. அது உண்மைதான் போல. நினைவாற்றல் மட்டுமல்ல, உணர்ச்சி வசப்படக்கூடிய நுண்ணறிவும் இதற்கு அதிகம். தன் கூட்டத்தில் யாராவது இறந்தால், இறுதிச்சடங்கு நடத்தி கண்ணீர் அஞ்சலி செலுத்துமாம். கூட்டத்தை ஒற்றுமையாக பாதுகாப்பதில் நட்புக்கு இலக்கணமாக திகழ்கிறது இந்த சாதுவான பலசாலி.
5. ஆப்பிரிக்க சாம்பல் கிளி. வண்ணம், வடிவம் என அனைத்தையும் சட்டென கிரகிக்கும் ஆற்றல் கொண்டது இந்த கிளி. நூற்றுக்கணக்கான வார்த்தைகளை மனப்பாடம் செய்து சரளமாக பேசும் திறமை இதற்கு உண்டு. இது கிட்டத்தட்ட ஐந்து வயது குழந்தையின் அறிவுக்கு சமம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
6. ஆக்டோபஸ். எலும்பே இல்லாத இந்த உயிரினம் தப்பிப்பதிலும், வேட்டையாடுவதிலும் கில்லாடி. முயற்சி செய்து தவறு செய்து அனுபவத்தில் பாடம் கற்றுக்கொள்ளும் திறன் கொண்டது. நீண்ட காலத்திற்கு முன்பு நடந்த சம்பவங்களையும் ஞாபகம் வைத்திருக்கும் சூப்பர் மெமரி இதற்கு உண்டு.
7. பன்றி. சின்ன வயதிலேயே தனக்குத்தானே பிரதிபலிக்கும் திறன் கொண்டது இந்த பன்றி. உணர்வுகளை குரல்கள் மூலம் வெளிப்படுத்தும் ஒரு தனித்துவமான மொழி அமைப்பும் இதற்கு உண்டு. இதனால், பன்றிகள் அறிவாளிகள் பட்டியலில் உயர் இடம் பிடிக்கின்றன.
8. காக்கா. காக்காவுக்கு கையில்லை, ஆனாலும் கருவிகளை வைத்து வேலை செய்யும் திறமை காக்காவுக்கு உண்டு. சிக்கலான பிரச்சினைகளையும் சாமர்த்தியமாக தீர்க்கும் புத்திசாலி. யார் நல்லவங்க, யார் கெட்டவங்க என முகத்தை வைத்து ஞாபகம் வைத்துக்கொள்ளும். கடந்த கால அனுபவங்களை வெச்சு தனது பழக்க வழக்கங்களையும் மாற்றி அமைத்துக்கொள்ளும் உஷார் பார்ட்டி இது.
9. புறா. சமாதானத்தின் தூதுவராக கருதப்படும் இந்த புறாக்கள், கண்ணாடியில் தெரியும் பிம்பம் ‘நம்மதுதான்’ என அடையாளம் கண்டு சுய உணர்வை வெளிப்படுத்துகிறது. இடங்களையும், முக்கியமான நபர்களையும் நீண்ட காலத்திற்கு நினைவில் வைத்திருக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.
10. எலி. அறிவியல் ஆய்வகங்களில் எலிகள் தான் கில்லி. ஏனெனில், மனிதர்களைப் போலவே அறிவாற்றல் கொண்டது இந்த எலி. ஆராய்ச்சிகளுக்கு ரொம்ப யூஸ்ஃபுல்லாக இருக்குமாம். கூட்டமாக வாழும் இயல்புடையது. இது உணர்ச்சி நுண்ணறிவையும் காட்டுது.
இந்த டாப் 10 பட்டியல், விலங்குகளின் உலகத்தில் மூளைக்காரர்கள் யார் என்பதை ஒரு சிறிய கண்ணோட்டம் மட்டுமே. ஒவ்வொரு விலங்குக்கும் தனித்துவமான திறமைகள் உண்டு, அவற்றின் அறிவாற்றலை நாம் குறைத்து மதிப்பிடக்கூடாது. மனிதர்களாகிய நாம் மட்டும் புத்திசாலிகள் என இறுமாப்பு கொள்ளாமல், இயற்கையின் படைப்பில் உள்ள அனைத்து உயிரினங்களையும் மதித்து போற்றுவோம்.