முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் 7 தாவரங்கள் மற்றும் அவற்றின் பயன்பாடு!

இயற்கையான முறையில் முடி வளர்ச்சியை ஊக்குவிக்க விரும்புகிறீர்களா? நம் வீட்டுத் தோட்டங்களிலும், சமையலறையிலும் எளிதில் கிடைக்கும் பல தாவரங்கள் முடிக்கு அடர்த்தியையும், ஆரோக்கியத்தையும் தரும். ஆனால் இது பலருக்கு தெரிவதில்லை. இந்தப் பதிவில், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் 7 தாவரங்கள் மற்றும் அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பதைப் பற்றி விரிவாகக் காண்போம்.

மரபணுக்கள், உணவுப் பழக்கவழக்கங்கள், மன அழுத்தம் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு போன்ற பல்வேறு காரணங்களால் முடி உதிர்வு ஏற்படலாம். இதற்கு பல விலையுயர்ந்த சிகிச்சைகள் இருந்தாலும், இயற்கை வழிகளைப் பின்பற்றியே முடி வளர்ச்சியைத் தூண்டலாம். 

தாவரங்களின் சக்தி: தாவரங்கள் பல நூற்றாண்டுகளாக மருத்துவ நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தாவரங்களில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் முடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கி, முடி உதிர்வைத் தடுத்து, புதிய முடி வளர்ச்சியைத் தூண்டுகின்றன.

முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் 7 தாவரங்கள்: 

  1. வெங்காயம்: வெங்காயத்தில் சல்பர் உள்ளது, இது கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இதை நேரடியாக தலையில் தேய்க்கலாம்.
  2. கற்றாழை: கற்றாழையில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் தலைமுடியை மென்மையாக வைத்து, பொடுகை நீக்கி, முடி உதிர்வைத் தடுக்கிறது. கற்றாழை ஜெல்லை வாரம் இருமுறை தலைக்கு பயன்படுத்துவது நல்லது.
  3. கொத்தமல்லி: கொத்தமல்லியில் வைட்டமின் K உள்ளது, இது முடி வளர்ச்சியை ஊக்குவித்து, முடியை பலப்படுத்துகிறது. வாரம் ஒரு முறை குளிப்பதற்கு முன் கொத்தமல்லியை அரைத்து தலையில் தடவி 30 நிமிடங்கள் கழித்து குளிக்கலாம்.
  4. மீசைப்பூண்டு: மீசைப்பூண்டுில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் முடி உதிர்வைத் தடுத்து, முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இதையும் அரைத்து நேரடியாக தலையில் தடவலாம்.
  5. கிரீன் டீ: கிரீன் டீயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் முடிக்கு ஊட்டம் அளித்து, முடி உதிர்வைத் தடுக்கிறது. வாரம் இருமுறை கிரீன் டீ பயன்படுத்தி தலைக்கு பேக் போடுவது நல்லது.
  6. ஆமணக்கு எண்ணெய்: ஆமணக்கு எண்ணெயில் புரோட்டீன் மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இது முடி வளர்ச்சியை ஊக்குவித்து, முடியை பலப்படுத்துகிறது. ஆமணக்கு எண்ணெயை தலைமுடியில் தடவி மசாஜ் செய்து, ஒரு மணி நேரம் வைத்து, பின்னர் ஷாம்பூ போட்டு கழுவலாம்.
  7. நீலி அவுரி: நீலியில் உள்ள ஆன்டிசெப்டிக் பண்புகள் தலைமுடியில் ஏற்படும் தொற்றுக்களைத் தடுத்து, முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. நீலி பொடியை தயிர் அல்லது தேங்காய் எண்ணெயுடன் கலந்து தலைமுடியில் பேக் போடுவது நல்ல பலன் அளிக்கும்.

மேலே குறிப்பிட்ட தாவரங்களைப் பயன்படுத்தி இயற்கை வழிகளில் முடி வளர்ச்சியை ஊக்குவிப்பது மிகவும் எளிது. மேற்கூறிய, தாவரங்களை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் ஆரோக்கியமான முடியைப் பெறலாம். இருப்பினும், ஒவ்வொருவரின் தலைமுடியும் வேறுபட்டது என்பதால், எந்த தாவரம் உங்களுக்கு சிறந்தது என்பதை அறிய ஒரு தகுந்த மருத்துவரை அணுகி ஆலோசிப்பது நல்லது.

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *