ஆரோக்கியம்

பீச் பழத்தில் இவ்வளவு நன்மைகளா!

செந்தூர நிறத்துக்கு சொந்தமான பீச் பழத்தின் பூர்வீகம் சீன நாடாகும். சமீபத்திய தொல்பொருள் ஆய்வு ஒன்று பீச் பழங்களின் சாகுபடி 3000 ஆண்டுகளுக்கு முந்தையது என்று கண்டுபிடித்துள்ளது. பீச் பழங்கள் முதலில் சீனாவில் இருந்து  பெர்சியாவிற்கும் பின்பு அங்கிருந்து ரோமானிய மற்றும் கிரேக்க நாடுகளுக்கு சென்றடைந்தது. இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கொண்ட பீச் பழத்தை ஸ்டோன் பழங்கள் என்றும் அழைக்கின்றனர். ஆப்பிள், பாதாம், பிளம்,பேரிக்காய் போன்ற ரோசேசியின் தாவரவியல் குடும்பத்தைச் சேர்ந்தது இந்த பீச் பழம்.

பீச் பழத்தின் நன்மைகளை பின்வருமாறு காணலாம்:

  • பீச் பழத்தில் வைட்டமின் சி மற்றும் இரும்பு சத்துக்கள் நிறைந்துள்ளன. ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க பீச் பழம் பெரிதும் உதவுகிறது.எனவே இரும்புச்சத்து குறைபாடு அல்லது ரத்தம் குறைவாக இருப்பவர்கள் தினமும் ஒரு பீச் பழத்தை சாப்பிட்டால் ரத்தத்தின் அளவை அதிகரிக்கலாம்.
  • கோடைகாலங்களில் பீச் பழங்களை அதிக அளவு காண முடியும். ஏனென்றால் கோடை வெயிலில் ஏற்படும் உடல் வறட்சியை போக்கி உடலுக்கு தேவையான நீர் சத்துக்களை பீச் பழங்கள் கொடுக்கின்றன. மேலும், அதிகப்படியான பீட்டா கரோலின் கண்களுக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி  கண் பார்வையை தெளிவாக்க உதவுகிறது. புற்றுநோய் மற்றும் மாகுலர் டிஜெனரேசன் எனும் கண்பார்வை குறைபாடுகளை சரி செய்ய உதவுகிறது.
  • பீச் பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் சி காணப்படுவதால் சரும பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது. பீச் பழ சதைகளை பயன்படுத்தி முகத்திற்கு பேசியல் செய்வதன் மூலம் சருமத்தில் உள்ள துளைகள், கரும்புள்ளிகள் மற்றும் சரும சுருக்கங்கள் வராமல் தடுக்கிறது. முகம் சுத்தமாகவும் பொலிவுடன் வைத்திருக்க உதவுகிறது.
  • உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு பீச் பழம் ஒரு வரப்பிரசாதமாக உள்ளது. ஏனென்றால் பீச் பழத்தில் எவ்வித கொழுப்புகளும் இல்லை.
  • பொட்டாசியம் மற்றும் இரும்பு சத்துக்கள் உள்ளதால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும் முடி உதிர்வதையும் தடுக்கிறது. தூக்கம் இல்லாமல் அவதிப்படுபவர்கள் இரவு நேரத்தில் பீச் பழத்தை தோலுடன் சாப்பிட்டு விட்டு படுத்தால் அமைதியான தூக்கம் கிடைக்கும்.
  • கர்ப்பிணி பெண்கள் பீச் பழத்தை எடுத்துக் கொள்வதால் கருவில் உள்ள குழந்தைக்கு நரம்பு சம்பந்தமான பிரச்சனைகள் வருவதை தடுக்கிறது.

சிறுநீரகப் பிரச்சினைகளால் அவதிப்படுபவர்கள் வாரத்திற்கு இரு முறை பீச் பழத்தை எடுத்துக் கொள்வதால் சிறுநீரகத்தில் உருவாகும் கல் மற்றும் கட்டிகளைத் தடுத்து சிறுநீரகங்கள் மற்றும் சிறுநீரகப் பையில் உள்ள நச்சு கழிவுகளை நீக்க பெரிதும் உதவுகிறது.

Author

Giri Ganapathy

Share
Published by
Giri Ganapathy

Recent Posts

இந்தியாவை விட்டு குடும்பத்துடன் வெளியேறும் விராட் கோலி?

இந்தியாவை விட்டு குடும்பத்துடன் வெளியேறும் விராட் கோலி?

இந்திய கிரிக்கெட் அணியின் தவிர்க்க முடியாத சக்தியாகவும், உலகளவில் கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயத்தில் நீங்கா இடம்பிடித்திருப்பவருமான விராட் கோலி, தனது…

2 days ago
மீண்டும் 1000, 2000 ரூபாய் நோட்டுகள் வருகிறது?

மீண்டும் 1000, 2000 ரூபாய் நோட்டுகள் வருகிறது?

சமீப காலமாக, அதிக மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் மீண்டும் அறிமுகப்படுத்தப்படலாம் என்ற செய்திகள் இணையத்தில் பரவி வந்தன. குறிப்பாக,…

2 days ago
கனவில் பாம்பு வருவதன் அர்த்தம் இதுதானா? 

கனவில் பாம்பு வருவதன் அர்த்தம் இதுதானா?

தூங்கும் போது நாம் காணும் ஒவ்வொரு கனவுக்கும் ஒரு அர்த்தம் உண்டு என்று கனவு சாஸ்திரம் கூறுகிறது. சில கனவுகள்…

2 days ago
அல்லு அர்ஜுன் ஃபிட்னஸ் ரகசியம்!

அல்லு அர்ஜுன் ஃபிட்னஸ் ரகசியம்!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அல்லு அர்ஜுன், தனது நடிப்புத் திறமையாலும், ஸ்டைலான தோற்றத்தாலும் ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.…

2 days ago
இனி உங்கள் குழந்தைகள் கீரை வேண்டாம் என சொல்லவே மாட்டார்கள்!

இனி உங்கள் குழந்தைகள் கீரை வேண்டாம் என சொல்லவே மாட்டார்கள்!

குழந்தைப் பருவத்தில் சரியான உணவுப் பழக்கத்தை ஏற்படுத்துவது மிகவும் முக்கியம். இது அவர்களின் உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு அடித்தளமாக…

4 days ago
அடிச்சு சொல்றேன், இப்படி ஒரு ஆம்லெட் சாப்பிட்டிருக்க மாட்டீங்க! 

அடிச்சு சொல்றேன், இப்படி ஒரு ஆம்லெட் சாப்பிட்டிருக்க மாட்டீங்க!

ஆம்லெட், முட்டையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு எளிய உணவு. ஆம்லெட்டில் பல வகைகள் உள்ளன, அவற்றில் ஸ்பானிஷ் ஆம்லெட்…

4 days ago