ஆரோக்கியம்

எளிமையாகக் கிடைக்கும் முருங்கைக் கீரையில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா?

Murungai Keerai

தற்போதுள்ள நகரமயமாதலிலும் வீட்டுக்கு ஒரு முருங்கை மரம் உள்ளது. பொதுவாக கிராமங்களில் பெரும்பாலான வீட்டுகளில் இரண்டு மூன்று முருங்கை மரங்கள் கூட காணப்படும். எளிமையாக கிடைக்கக்கூடிய முருங்கைக்கீரை பலருக்கு ஃபேவரைட். இந்தப் பதிவில் முருங்கைக் கீரையில் உள்ள சத்துக்களை பின்வருமாறு காணலாம்.

  1. முருங்கைக் கீரையில் வைட்டமின் ஏ,பி,சி சத்துக்கள் கொட்டிக் கிடக்கின்றன. குறிப்பாக சுண்ணாம்புச் சத்து, புரதம்,இரும்புச்சத்து,கந்தகம், மெக்னீசியம்,குளோரின், தாமிரம் போன்ற சத்துக்களும் உள்ளன.
  2. முருங்கை இலை பொடியை எடுத்துக் கொள்வது மூளை ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய அளவில் உதவுகிறது.
  3. மேலும், இது அல்சைமர் நோயை குணப்படுத்தும் தன்மை உடையது. ஞாபகமறதியால் அவதிப்படுபவர்களுக்கு முருங்கைக் கீரையில் உள்ள வைட்டமின் இ மற்றும் சி சத்துக்கள் ஞாபக சக்தி மற்றும் மனவளத்தை மேம்படுத்த உதவுகிறது.
  4. முருங்கை இலையை சூப் செய்து பருகுவதால் மார்பக சளி,ஆஸ்துமா, சைனஸ் போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு தீர்வு கிடைக்கிறது. முருங்கை இலை பொடி மூளை ஆரோக்கியத்திற்கு உதவுவதோடு மட்டுமல்லாமல் இதய நலனிற்க்கும் பாதுகாப்பளித்து ரத்தத்தில் உள்ள கொழுப்புகளின் அளவை குறைக்கிறது.
  5. மகப்பேறு அடைந்த பெண்கள் முருங்கைக் கீரையை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால் தாய்ப்பால் சுரப்பதை அதிகரிக்க உதவுகிறது. முருங்கை இலைச் சாறு ரத்தத்தை சுத்துகரித்து எலும்புகளுக்கு பாதுகாப்பு தருகிறது. மேலும் கர்ப்பப்பை நலனுக்கும் கர்ப்பப்பையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கும் தீர்வாக உள்ளது.
  6. முருங்கைக் கீரையில் உள்ள பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சை போன்ற எதிர்ப்பு சத்துக்கள் சரும பிரச்சனைகள் மற்றும் சருமத்தில் ஏற்படும் பாக்டீரியா தொற்றுகள் போன்றவற்றிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது.
  7. முருங்கைக் கீரை பொரியலை தினசரி உணவில் சேர்த்து வந்தால் பித்த மயக்கம்,மலச்சிக்கல்,பார்வை மந்தம்,கண்நோய் போன்றவை குணமாகும். சிறுநீர் குழாயில் உள்ள தொற்றுகளை போக்கவும் உதவும்.

உடல் சூடு அதிகம் இருப்பவர்கள் வாரத்தில் இரண்டு முறையாவது முருங்கைக் கீரையை சேர்த்துக் கொள்ள உடல் சூடு தணியும். இன்னும் எவ்வளவோ நன்மைகளை உள்ளடக்கிய முருங்கைக்கீரை நமக்கு எளிதாகக் கிடைக்கக்கூடிய ஒன்று, தினசரி உணவில் முருங்கைக் கீரையை சேர்த்துக்கொண்டு நம் உடல் நலத்தை பேணிப் பாதுகாப்போம்.

Author

Giri Ganapathy

Share
Published by
Giri Ganapathy

Recent Posts

இந்தியாவை விட்டு குடும்பத்துடன் வெளியேறும் விராட் கோலி?

இந்தியாவை விட்டு குடும்பத்துடன் வெளியேறும் விராட் கோலி?

இந்திய கிரிக்கெட் அணியின் தவிர்க்க முடியாத சக்தியாகவும், உலகளவில் கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயத்தில் நீங்கா இடம்பிடித்திருப்பவருமான விராட் கோலி, தனது…

2 days ago
மீண்டும் 1000, 2000 ரூபாய் நோட்டுகள் வருகிறது?

மீண்டும் 1000, 2000 ரூபாய் நோட்டுகள் வருகிறது?

சமீப காலமாக, அதிக மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் மீண்டும் அறிமுகப்படுத்தப்படலாம் என்ற செய்திகள் இணையத்தில் பரவி வந்தன. குறிப்பாக,…

2 days ago
கனவில் பாம்பு வருவதன் அர்த்தம் இதுதானா? 

கனவில் பாம்பு வருவதன் அர்த்தம் இதுதானா?

தூங்கும் போது நாம் காணும் ஒவ்வொரு கனவுக்கும் ஒரு அர்த்தம் உண்டு என்று கனவு சாஸ்திரம் கூறுகிறது. சில கனவுகள்…

2 days ago
அல்லு அர்ஜுன் ஃபிட்னஸ் ரகசியம்!

அல்லு அர்ஜுன் ஃபிட்னஸ் ரகசியம்!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அல்லு அர்ஜுன், தனது நடிப்புத் திறமையாலும், ஸ்டைலான தோற்றத்தாலும் ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.…

2 days ago
இனி உங்கள் குழந்தைகள் கீரை வேண்டாம் என சொல்லவே மாட்டார்கள்!

இனி உங்கள் குழந்தைகள் கீரை வேண்டாம் என சொல்லவே மாட்டார்கள்!

குழந்தைப் பருவத்தில் சரியான உணவுப் பழக்கத்தை ஏற்படுத்துவது மிகவும் முக்கியம். இது அவர்களின் உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு அடித்தளமாக…

4 days ago
அடிச்சு சொல்றேன், இப்படி ஒரு ஆம்லெட் சாப்பிட்டிருக்க மாட்டீங்க! 

அடிச்சு சொல்றேன், இப்படி ஒரு ஆம்லெட் சாப்பிட்டிருக்க மாட்டீங்க!

ஆம்லெட், முட்டையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு எளிய உணவு. ஆம்லெட்டில் பல வகைகள் உள்ளன, அவற்றில் ஸ்பானிஷ் ஆம்லெட்…

4 days ago