தினசரி சரியான நேரத்தில், சரியான உணவை உட்கொள்வது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முக்கியம் சாப்பிட்ட பிறகு நாம் என்ன செய்கிறோம் என்பது. சில தவறான பழக்கங்கள் நம் செரிமான அமைப்பை பாதித்து உடல் நலக் குறைபாடுகளுக்கு வழிவகுக்கும். சாப்பிட்டவுடன் நாம் செய்யக்கூடாத 7 விஷயங்களைப் பற்றி இங்கு விரிவாகக் காண்போம்.
1. பழங்கள் உட்கொள்ளுதல்:
பழங்கள் ஆரோக்கியமானவை என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அவற்றை சரியான நேரத்தில் உட்கொள்வது அவசியம். சாப்பிட்டவுடன் பழங்களை உட்கொண்டால், அவை செரிமானமாவதற்கு அதிக நேரம் எடுக்கும். இதனால் வயிற்றில் புளிப்புத்தன்மை அதிகரித்து நெஞ்செரிச்சல், வாயு தொல்லை போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். உணவுக்கு முன் அல்லது சாப்பிட்ட பிறகு குறைந்தது ஒரு மணி நேரம் கழித்து பழங்களை சாப்பிடுவது நல்லது.
2. டீ அல்லது காபி அருந்துதல்:
பலர் சாப்பிட்டவுடன் டீ அல்லது காபி குடிக்கும் பழக்கம் கொண்டிருக்கிறார்கள். டீயில் டானின் (Tannin) என்ற அமிலம் அதிகமாக உள்ளது. இது உணவில் உள்ள இரும்புச் சத்தை உறிஞ்சுவதைத் தடுக்கிறது. மேலும், டீயில் உள்ள அமிலம் புரதச் சத்துடன் வினைபுரிந்து செரிமானத்தை கடினமாக்குகிறது. காஃபியில் உள்ள காஃபின் செரிமான நொதிகளின் செயல்பாட்டை பாதித்து செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். எனவே, சாப்பிட்ட பிறகு குறைந்தது ஒரு மணி நேரம் கழித்து டீ அல்லது காபி அருந்துவது நல்லது.
3. குளித்தல்:
சாப்பிட்டவுடன் குளிப்பது செரிமானத்தை பாதிக்கும் ஒரு பொதுவான பழக்கம். குளிக்கும்போது உடல் வெப்பநிலை மாறுவதால், இரத்த ஓட்டம் சருமம் மற்றும் பிற உறுப்புகளுக்குத் திருப்பப்படும். இதனால் வயிற்றுப் பகுதிக்கு செல்லும் இரத்த ஓட்டம் குறைந்து செரிமான செயல்முறை பாதிக்கப்படும். சாப்பிட்ட பிறகு குறைந்தது அரை மணி நேரம் கழித்து குளிப்பது நல்லது.
4. புகைப்பிடித்தல்:
உங்களுக்கு சாப்பிட்டவுடன் புகை பிடிக்கும் பழக்கம் இருந்தால் அது மிகவும் ஆபத்தான ஒரு செயல். சாப்பிட்ட பிறகு ஒரு சிகரெட் பிடிப்பது பத்து சிகரெட்டுகளுக்கு சமம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. உணவுக்குப் பிறகு செரிமான உறுப்புகளுக்கு ரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும் நேரத்தில் புகைப்பிடிப்பதால், நிகோட்டின் எளிதில் உடலால் உறிஞ்சப்பட்டு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். இது புற்றுநோய் மற்றும் பிற தீவிர நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது.
5. தீவிர உடற்பயிற்சி அல்லது நடனம்:
சாப்பிட்டவுடன் உடற்பயிற்சி செய்வது அல்லது நடனம் ஆடுவது செரிமானத்தை பாதிக்கும். உடற்பயிற்சி செய்யும்போது, உடலில் உள்ள ஆற்றல் தசைகளுக்கு திருப்பி விடப்படும். இதனால் செரிமான உறுப்புகளுக்கு போதுமான இரத்தம் கிடைக்காமல் செரிமானம் தாமதமாகும். லேசான நடைப்பயிற்சி கூட சில சமயங்களில் செரிமானத்தை பாதிக்கும். சாப்பிட்ட பிறகு குறைந்தது ஒரு மணி நேரம் கழித்து உடற்பயிற்சி செய்வது நல்லது.
6. பெல்ட்டைத் தளர்த்துதல் அல்லது கழற்றுதல்:
அதிகமாக சாப்பிட்டு வயிறு இறுக்கமாக இருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டால், சிலர் பெல்ட்டைத் தளர்த்துவார்கள் அல்லது கழற்றி விடுவார்கள். இது செரிமான அமைப்பை பாதிக்கும். இவ்வாறு செய்வதால் குடலில் அழுத்தம் ஏற்பட்டு, அது திசை மாறவோ அல்லது அடைப்பு ஏற்படவோ வாய்ப்புள்ளது. எனவே, அதிக இறுக்கமான ஆடைகளை அணிவதைத் தவிர்ப்பது நல்லது.
7. தூங்குதல்:
சாப்பிட்டு உடனே தூங்கும் பழக்கம் இருக்கா உங்களுக்கு? அது அஜீரணக் கோளாறுகளுக்கு வழிவகுக்கும். படுத்திருக்கும்போது செரிமான அமிலங்கள் உணவுக்குழாயில் மேலேறி நெஞ்செரிச்சல் மற்றும் பிற பிரச்சனைகளை ஏற்படுத்தும். மேலும், சாப்பிட்டவுடன் தூங்கினால் உடல் கலோரிகளை எரிக்கும் வாய்ப்பு குறைந்து உடல் எடை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. சாப்பிட்ட பிறகு குறைந்தது இரண்டு மணி நேரம் கழித்து தூங்கச் செல்ல வேண்டும்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள 7 விஷயங்களும் சாப்பிட்டவுடன் நாம் தவிர்க்க வேண்டிய முக்கிய செயல்கள். இந்த பழக்கங்களை மாற்றுவதன் மூலம் செரிமானத்தை மேம்படுத்தலாம். இதன் மூலமாக நீங்கள் என்றும் ஆரோக்கியமாக இருக்க முடியும்.
இந்திய கிரிக்கெட் அணியின் தவிர்க்க முடியாத சக்தியாகவும், உலகளவில் கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயத்தில் நீங்கா இடம்பிடித்திருப்பவருமான விராட் கோலி, தனது…
சமீப காலமாக, அதிக மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் மீண்டும் அறிமுகப்படுத்தப்படலாம் என்ற செய்திகள் இணையத்தில் பரவி வந்தன. குறிப்பாக,…
தூங்கும் போது நாம் காணும் ஒவ்வொரு கனவுக்கும் ஒரு அர்த்தம் உண்டு என்று கனவு சாஸ்திரம் கூறுகிறது. சில கனவுகள்…
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அல்லு அர்ஜுன், தனது நடிப்புத் திறமையாலும், ஸ்டைலான தோற்றத்தாலும் ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.…
குழந்தைப் பருவத்தில் சரியான உணவுப் பழக்கத்தை ஏற்படுத்துவது மிகவும் முக்கியம். இது அவர்களின் உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு அடித்தளமாக…
ஆம்லெட், முட்டையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு எளிய உணவு. ஆம்லெட்டில் பல வகைகள் உள்ளன, அவற்றில் ஸ்பானிஷ் ஆம்லெட்…