கொய்யாப்பழம் ஒரு சுவையான மற்றும் சத்தான பழமாகும். இதில் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்சிஜனேற்றிகள் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, செரிமானத்தை மேம்படுத்துவது மற்றும் சில நோய்களின் அபாயத்தை குறைப்பது உள்ளிட்ட பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. தினசரி ஒரு கொய்யாப்பழத்தை சாப்பிடுவது உங்களது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த ஒரு சிறந்த வழியாகும்.
தினசரி ஒரு கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:
கொய்யாப்பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி தொற்று நோய்களுக்கு எதிராக போராட உதவும் ஒரு சக்திவாய்ந்த ஆக்சிஜனேற்றி. ஒரு கொய்யாப்பழத்தில் ஒரு நாளைக்கு பரிந்துரைக்கப்படும் விட்டமின் சி அளவில் 26% சதவீதம் உள்ளது.
கொய்யாப்பழம் நார்ச்சத்து நிறைந்தது. இது செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. நார்ச்சத்து மலச்சிக்கலை தடுக்கவும், குடல் இயக்கத்தை ஒழுங்குபடுத்தவும், செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
கொய்யா பழத்தில் நிறைந்துள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் ஒரு முக்கிய தாதுவாகும். உயர் ரத்த அழுத்தமானது இதய நோய் மற்றும் பக்கவாதத்திற்கான அபாயத்தை அதிகரிப்பதால் கொய்யாப்பழத்தில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தைக் குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
கொய்யாப்பழத்தில் நிறைந்துள்ள ஆக்ஸிஜனேற்றிகள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ராடிக்கல்களை எதிர்த்து போராட உதவுகிறது. ஃப்ரீ ராடிக்கல்கள் செல் சேதத்திற்கு வழி வகுத்து புற்றுநோயை ஏற்படுத்தக்கூடும். எனவே கொய்யாப்பழத்தில் உள்ள ஆக்சிஜனேற்றிகள் புற்றுநோய் அபாயத்தை குறைக்க உதவுகிறது.
கொய்யாப்பழத்தில் உள்ள வைட்டமின் ஏ, கண் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமான ஒரு ஊட்டச்சத்து ஆகும். வைட்டமின் ஏ பார்வை இழப்பு மற்றும் விழித்திரை சிதைவு போன்ற வயது தொடர்பான கண் நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது.
கொய்யா பழத்தில் மக்னீசியம் நிறைந்திருப்பதால் அது மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. மக்னீசியம் உடலில் உள்ள ஸ்ட்ரெஸ் ஹார்மோன்களின் அளவை குறைத்து, மன அழுத்தமின்றி மகிழ்ச்சியாக இருக்க உதவுகிறது.
எனவே தினசரி ஒரு கொய்யாப்பழம் சாப்பிடுவதால் உங்களுக்கு பல்வேறு விதமான ஆரோக்கிய நன்மைகள் கிடைப்பதால், இதை உங்களது உணவு வழக்கத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள். இது மூலமாக நீங்கள் என்றும் ஆரோக்கியமாக இருக்கலாம்.