செந்தூர நிறத்துக்கு சொந்தமான பீச் பழத்தின் பூர்வீகம் சீன நாடாகும். சமீபத்திய தொல்பொருள் ஆய்வு ஒன்று பீச் பழங்களின் சாகுபடி 3000 ஆண்டுகளுக்கு முந்தையது என்று கண்டுபிடித்துள்ளது. பீச் பழங்கள் முதலில் சீனாவில் இருந்து பெர்சியாவிற்கும் பின்பு அங்கிருந்து ரோமானிய மற்றும் கிரேக்க நாடுகளுக்கு சென்றடைந்தது. இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கொண்ட பீச் பழத்தை ஸ்டோன் பழங்கள் என்றும் அழைக்கின்றனர். ஆப்பிள், பாதாம், பிளம்,பேரிக்காய் போன்ற ரோசேசியின் தாவரவியல் குடும்பத்தைச் சேர்ந்தது இந்த பீச் பழம்.
பீச் பழத்தின் நன்மைகளை பின்வருமாறு காணலாம்:
- பீச் பழத்தில் வைட்டமின் சி மற்றும் இரும்பு சத்துக்கள் நிறைந்துள்ளன. ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க பீச் பழம் பெரிதும் உதவுகிறது.எனவே இரும்புச்சத்து குறைபாடு அல்லது ரத்தம் குறைவாக இருப்பவர்கள் தினமும் ஒரு பீச் பழத்தை சாப்பிட்டால் ரத்தத்தின் அளவை அதிகரிக்கலாம்.
- கோடைகாலங்களில் பீச் பழங்களை அதிக அளவு காண முடியும். ஏனென்றால் கோடை வெயிலில் ஏற்படும் உடல் வறட்சியை போக்கி உடலுக்கு தேவையான நீர் சத்துக்களை பீச் பழங்கள் கொடுக்கின்றன. மேலும், அதிகப்படியான பீட்டா கரோலின் கண்களுக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி கண் பார்வையை தெளிவாக்க உதவுகிறது. புற்றுநோய் மற்றும் மாகுலர் டிஜெனரேசன் எனும் கண்பார்வை குறைபாடுகளை சரி செய்ய உதவுகிறது.
- பீச் பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் சி காணப்படுவதால் சரும பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது. பீச் பழ சதைகளை பயன்படுத்தி முகத்திற்கு பேசியல் செய்வதன் மூலம் சருமத்தில் உள்ள துளைகள், கரும்புள்ளிகள் மற்றும் சரும சுருக்கங்கள் வராமல் தடுக்கிறது. முகம் சுத்தமாகவும் பொலிவுடன் வைத்திருக்க உதவுகிறது.
- உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு பீச் பழம் ஒரு வரப்பிரசாதமாக உள்ளது. ஏனென்றால் பீச் பழத்தில் எவ்வித கொழுப்புகளும் இல்லை.
- பொட்டாசியம் மற்றும் இரும்பு சத்துக்கள் உள்ளதால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும் முடி உதிர்வதையும் தடுக்கிறது. தூக்கம் இல்லாமல் அவதிப்படுபவர்கள் இரவு நேரத்தில் பீச் பழத்தை தோலுடன் சாப்பிட்டு விட்டு படுத்தால் அமைதியான தூக்கம் கிடைக்கும்.
- கர்ப்பிணி பெண்கள் பீச் பழத்தை எடுத்துக் கொள்வதால் கருவில் உள்ள குழந்தைக்கு நரம்பு சம்பந்தமான பிரச்சனைகள் வருவதை தடுக்கிறது.
சிறுநீரகப் பிரச்சினைகளால் அவதிப்படுபவர்கள் வாரத்திற்கு இரு முறை பீச் பழத்தை எடுத்துக் கொள்வதால் சிறுநீரகத்தில் உருவாகும் கல் மற்றும் கட்டிகளைத் தடுத்து சிறுநீரகங்கள் மற்றும் சிறுநீரகப் பையில் உள்ள நச்சு கழிவுகளை நீக்க பெரிதும் உதவுகிறது.