இந்த 10 விஷயங்களைப் பின்பற்றினால் உங்க ஸ்மார்ட்ஃபோன் பேட்டரி நீண்ட காலம் உழைக்கும்!

  1. 80% வரை மட்டுமே சார்ஜ் செய்யுங்கள்: ஸ்மார்ட்போன் பேட்டரியை எப்போதும் 100% வரை சார்ஜ் செய்ய வேண்டிய அவசியமில்லை. 80% வரை சார்ஜ் செய்தால் போதுமானது. இது பேட்டரியின் ஆயுளை அதிகரிக்கும்.
  2. இரவு முழுவதும் சார்ஜ் செய்யாதீர்கள்: இரவு முழுவதும் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்வது பேட்டரிக்கு நல்லதல்ல. சார்ஜ் ஆனதும் சார்ஜரிலிருந்து அகற்றிவிடுங்கள்.
  3. திரை பிரகாசத்தை குறைக்கவும்: திரை பிரகாசத்தை குறைப்பதன் மூலம் பேட்டரி உபயோகத்தை குறைக்கலாம். ஆட்டோ பிரகாசம் அம்சத்தை பயன்படுத்தி திரை பிரகாசத்தை தானாக சரிசெய்யலாம்.
  4. தேவையற்ற நோட்டிபிகேஷன்களை நிறுத்தவும்: ஒவ்வொரு செயலிக்கும் வரும் நோட்டிபிகேஷன்களை அணைப்பதன் மூலம் பேட்டரி உபயோகத்தை குறைக்கலாம்.
  5. பின்னணி செயலிகளைத் தடுக்கவும்: நீங்கள் பயன்படுத்தாத செயலிகளை பின்னணியில் இயங்க விடாமல் மூடிவிடுங்கள்.
  6. லொகேஷனை ஆஃப் செய்யவும்: GPS, Bluetooth போன்ற சேவைகளை தேவைப்படும் போது மட்டுமே பயன்படுத்துங்கள்.
  7. அதிக வெப்பத்தைத் தவிர்க்கவும்: ஸ்மார்ட்போனை நேரடி சூரிய ஒளியில் அல்லது சூடான இடத்தில் வைக்காதீர்கள்.
  8. அசல் சார்ஜரைப் பயன்படுத்துங்கள்: எப்போதும் அசல் சார்ஜரை பயன்படுத்துங்கள். மற்ற சார்ஜர்கள் பேட்டரியை சேதப்படுத்தலாம்.
  9. பேட்டரி சேவிங் மோடை பயன்படுத்துங்கள்: உங்கள் ஸ்மார்ட்போனில் பேட்டரி சேமிப்பு மோடு இருந்தால் அதை பயன்படுத்தலாம்.
  10. பழைய பேட்டரியை மாற்றவும்: நீண்ட காலமாக பயன்படுத்தப்படும் பேட்டரிகள் திறனை இழந்துவிடும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் பேட்டரியை மாற்ற வேண்டியிருக்கும்.

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *