இன்றைய காலகட்டத்தில், ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் முகத்தில் வளரும் முடியை நீக்குவதற்கு ரேசர் பிளேடுகளை பயன்படுத்துவது மிகவும் பொதுவான நடைமுறையாகிவிட்டது. குறிப்பாக, முகத்தில் உள்ள முடியை நீக்குவதற்கு ஷேவிங் செய்வது மிகவும் விரைவான முறையாக இருப்பதால் பலரும் இதை விரும்புகின்றனர். ஆனால், பெண்கள் முகத்தில் ஷேவிங் செய்வது நல்லதா?
பெண்கள் ஷேவிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்:
- ரேசர் பிளேடு சருமத்தின் மேற்பரப்பை மென்மையாக தேய்க்கும்போது, இறந்த செல்கள் நீக்கப்பட்டு சருமம் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.
- ஷேவிங் செய்வதால் சரும துளைகளில் தேங்கியிருக்கும் எண்ணெய் மற்றும் அழுக்குகள் வெளியேற்றப்பட்டு சருமம் சுத்தமாக இருக்கும்.
- முகத்தில் உள்ள முடிகள் நீக்கப்படுவதால் சருமம் மென்மையாகவும், மிருதுவாகவும் இருக்கும்.
- ஷேவிங் செய்த பிறகு பயன்படுத்தப்படும் மாய்ஸ்சரைசர், ஃபேஸ் பேக் போன்றவை சருமத்தால் எளிதில் உறிஞ்சப்பட்டு அதிகப்படியான பலனை அளிக்கும்.
பெண்கள் ஷேவிங் செய்வதால் ஏற்படும் தீமைகள்:
- மிகவும் சென்சிடிவ் சருமம் கொண்டவர்களுக்கு ஷேவிங் செய்வதால் சருமம் சிவந்து, எரிச்சலாக இருக்கும்.
- கவனக்குறைவாக ஷேவ் செய்வதால் சருமத்தில் வெட்டுக்கள், காயங்கள் ஏற்படலாம்.
- கிருமி தொற்று ஏற்பட்ட ரேசர் பிளேடை பயன்படுத்துவதால் சருமத்தில் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.
- சிலருக்கு ஷேவ் செய்த பிறகு முடிகள் சருமத்திற்குள் வளர்ந்து Ingrown முடி பிரச்சனை ஏற்படலாம்.
- ஷேவிங் செய்வது ஒரு தற்காலிக தீர்வு மட்டுமே. சில நாட்களில் முடிகள் மீண்டும் வளர்ந்துவிடும்.
ஷேவிங் செய்யும் போது கவனிக்க வேண்டியவை:
மழுங்கிய அல்லது அசுத்தமான பிளேடுகள் பயன்படுத்துவதை தவிர்க்கவும். ஷேவ் செய்யும் முன் சருமத்தை நன்றாக ஈரப்படுத்தவும். இதனால் சருமம் மென்மையாகி வெட்டுக்கள் ஏற்படுவதை தடுக்கலாம். கட்டாயம் ஷேவிங் கிரீம் அல்லது ஜெல் பயன்படுத்துங்கள். இது பிளேடு சருமத்தில் எளிதில் நழுவுவதற்கு உதவும்.
ஒரே இடத்தில் பல முறை ஷேவ் செய்ய வேண்டாம். ஏனெனில் இவ்வாறு செய்வது சருமத்தை எரிச்சலடையச் செய்யும். ஷேவ் செய்த பிறகு மாய்ஸ்சரைசர் பயன்படுத்துங்கள். இது சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கும்.
ஷேவிங் செய்வது என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம். மேற்கண்ட தகவல்களைக் கருத்தில் கொண்டு, உங்களுக்கு எது சிறந்தது என்பதை நீங்களே முடிவு செய்யலாம்.