சாப்பிட்ட பின் செய்யக்கூடாத 10 விஷயங்கள்!

1. தண்ணீர் குடிப்பது - சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்க வேண்டாம். இது செரிமான நொதிகளை நீர்த்துப் போகச் செய்து செரிமானத்தை பாதிக்கும்.

2. டீ அல்லது காபி – டீ அல்லது காபி அருந்துவதைத் தவிர்க்கவும். தேயிலையில் உள்ள டானின்கள் இரும்புச் சத்தை உறிஞ்சுவதைத் தடுக்கலாம்.

3. பழங்கள் சாப்பிடுவது – சாப்பிட்ட உடனே பழங்கள் சாப்பிட வேண்டாம். பழங்கள் வேகமாக செரிமானமடையும் என்பதால், மற்ற உணவுகளுடன் சேர்ந்து சாப்பிடும்போது செரிமான பிரச்சனைகள் வரலாம்.

4. தூங்குவது – சாப்பிட்ட உடனே தூங்கக் கூடாது. இது நெஞ்செரிச்சல் மற்றும் அஜீரணத்தை ஏற்படுத்தும்.

5. உடற்பயிற்சி – சாப்பிட்ட உடனே உடற்பயிற்சி செய்வதை தவிர்க்கவும். இது வாந்தி, வயிற்று வீக்கம் மற்றும் செரிமான கோளாறுகளை ஏற்படுத்தும்.

6. புகைப்பிடித்தல் – சாப்பிட்ட பிறகு புகைப்பது மிகவும் தீங்கு விளைவிக்கும். இது செரிமானத்தை பாதிப்பதோடு உடல் நலத்திற்கும் கேடு.

7. குளித்தல் – சாப்பிட்ட உடனே குளிப்பதை தவிர்க்கவும். குளிக்கும்போது ரத்த ஓட்டம் சருமத்திற்கு செல்வதால் செரிமானம் பாதிக்கப்படும்.

8. பெல்ட்டை தளர்த்துவது  - சாப்பிட்ட பிறகு பெல்ட்டை தளர்த்துவது அதிகமாக சாப்பிடத் தூண்டும்.

9. அதிக வேலை செய்வது - சாப்பிட்ட உடனே அதிக வேலை செய்வது செரிமானத்தை பாதிக்கும். சிறிது நேரம் ஓய்வெடுப்பது நல்லது.