- Giri Ganapathy
அமேசான் மழைக்காடு, உலகிலேயே பல்லுயிர் பெருக்கம் அதிகம் கொண்ட இடங்களில் ஒன்றாகும். இங்கு பல வகையான பூச்சிகள், தாவரங்கள், பறவைகள், பாலூட்டிகள் வாழ்கின்றன.
அமேசான் இலை மீன் (Amazon Leaf Fish): பார்க்க இலை போல இருக்கும் இந்த மீன், மற்ற மீன்களை ஏமாற்றி தனக்கு இரையாக்கிக் கொள்ளும்.
அமேசானிய டேபிர் (Amazonian Tapir): குதிரை, காண்டாமிருகத்தின் இனத்தைச் சேர்ந்த டேபிர், நீளமான முகத்தையும் குட்டையான வாலையும் கொண்டது.
மாட்டா மாட்டா ஆமை (Mata Mata Turtle): வித்தியாசமான தோற்றத்தை கொண்ட இந்த ஆமை தட்டையான உடலையும், முக்கோண வடிவ தலையையும் கொண்டது.
பிங்க் டோ சிலந்தி (Pinktoe Tarantula): மரங்களில் வாழும் வகையைச் சேர்ந்த இந்த சிலந்தி மிகப்பெரியதாகவும், அதன் கால்களில் முடி போன்ற அமைப்பையும் கொண்டிருக்கும்.
கண்ணாடி தவளை (Glass Frog): கண்ணாடித் தவளைகள் தோல் மெலிதாக இருப்பதால், அவற்றின் உள்ளுறுப்புகளை வெறும் கண்ணால் காண முடியும்.
கோல்டன் லயன் டாமரின் (Golden Lion Tamarin): சிறிய குரங்கு இனமான இவை பிரகாசமான தங்க நிற முடியைக் கொண்டுள்ளன.
ஹோட்சின் (Hoatzin): கொட்டும் பறவை (Stink Bird) என்று அழைக்கப்படும் ஹோட்சின், விசித்திரமான தோற்றத்தைக் கொண்ட பறவை.