இதய நோய்கள் உலக அளவில் பலரது மரணத்திற்கு முக்கிய காரணமாக உள்ளது. ஆரோக்கியமான உணவுமுறை, உடற்பயிற்சி மற்றும் புகைப்பிடிப்பதைத் தவிர்ப்பது போன்ற வாழ்க்கைமுறை மாற்றங்கள் மூலமாக இதய நோய்களைத் தடுக்க முடியும். இதய ஆரோக்கியத்திற்கு பழங்கள் ஒரு முக்கிய உணவாகும். பழங்களில் நார்ச்சத்து வைட்டமின்கள் தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளதால் இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவுகின்றன.
இதயத்தை காக்கும் பழங்கள்:
ஆப்பிள்: ஆப்பிளில் கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்துள்ளதால் இது கெட்ட LDL கொழுப்பை குறைத்து நல்ல HDL கொழுப்பை அதிகரிக்க உதவுகிறது. இதனால், ரத்த அழுத்தம் நிர்வகிக்கப்பட்டு இதய நோயின் அபாயம் பெரிதளவில் குறைகிறது.
பெர்ரி பழங்கள்: ஸ்ட்ராபெரி, ப்ளூபெர்ரி, ராஸ்பெர்ரி மற்றும் பிளாக்பெர்ரி போன்ற பெர்ரி பழங்கள் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்தவை. இவை செல்களை சேதத்தில் இருந்து பாதுகாத்து ரத்த அழுத்தத்தைக் குறைப்பதால் இதய நோய் பாதிப்புகள் தடுக்கப்படுகின்றன.
வாழைப்பழம்: வாழைப்பழங்கள் பொட்டாசியத்தின் சிறந்த மூலமாகும். இது ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த பெரிதளவில் உதவுகிறது. மேலும் இதில் நிறைந்துள்ள வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
திராட்சை: திராட்சையில் ரெஸ்வெராட்ரால் என்ற ஆக்சிஜனேற்றி உள்ளது. இது இதய ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்குகிறது. குறிப்பாக கெட்ட கொழுப்பின் அளவை இது குறைப்பதால், இதய பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைகிறது.
மாதுளை: மாதுளையில் யூனிகாலஜின் என்ற ஆக்சிஜனேற்றி உள்ளது. இது இதய ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. எனவே மாதுளம் பழம் சாப்பிடுவதால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு குறைந்து ரத்த அழுத்தத்தை நிர்வகிக்கிறது.
வெள்ளரிக்காய்: வெள்ளரிக்காய் 95% சதவீதம் தண்ணீரால் ஆனது. இது உங்களை நீரேற்றமாக வைத்திருக்க உதவும். மேலும், இதில் பொட்டாசியம் இருப்பதால் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
மேலே, குறிப்பிட்டுள்ள பழங்களை நீங்கள் தினசரி உங்களது உணவுகளில் சேர்த்துக்கொள்வதால், இதய நோய்க்கான அபாயம் பெரிதளவில் குறைகிறது. மேலும் அவை உங்கள் இதய ஆரோக்கியத்திற்கும் நல்லது என்பதால், மறவாமல் அனைவருமே பழங்களை சாப்பிடுவது நல்லது.