இன்றைய காலத்தில் சர்க்கரை நோய் என்பது ஒரு சாதாரண நோயாக மாறிவிட்டது. இது ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதால் ஏற்படுகிறது. சர்க்கரை நோய்க்கு தற்போது வரை முழுமையான சிகிச்சை இல்லை என்றாலும் வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலமாக அதை கட்டுப்படுத்தலாம். எனவே, சர்க்கரை நோயாளிகள் அவர்கள் உட்கொள்ளும் உணவில் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக சர்க்கரை நோயாளிகள எதுபோன்ற பழங்களை உணவாக எடுத்துக் கொள்கிறார்கள் என்பதில் கவனம் தேவை. பலாப்பழம் என்பது அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய ஒரு பிரபலமான பழமாகும். ஆனால் சர்க்கரை நோயாளிகள் இந்த பழத்தை சாப்பிடலாமா? என்ற கேள்வி பலருக்கு உள்ளது.
பலாப்பழத்தின் ஊட்டச்சத்துக்கள்:
பலாப்பழம் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நாச்சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான பழம். இதில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, பொட்டாசியம் மற்றும் மக்னீசியன் உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. பலாப்பழம் நார்ச்சத்து நிறைந்தது என்பதால் செரிமான ஆரோக்கியத்திற்கு உதவி, ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும்.
சர்க்கரை நோயாளிகள் பலாப்பழம் சாப்பிடுவதன் நன்மைகள்:
- பலாப்பழம் அதன் குறைந்த கிளைசெமிக் குறியீட்டிற்கு பெயர் பெற்றது. அதாவது இது ரத்த சர்க்கரை அளவில் திடீர் அதிகரிப்பை ஏற்படுத்தாது. நார்ச்சத்து நிறைந்திருப்பதால் இது ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.
- பலாப்பழத்தில் வைட்டமின் சி மற்றும் ஆக்சிஜனேட்ரிகள் நிறைந்திருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவி தொற்று நோய்க்கான அபாயத்தை குறைக்கிறது.
- பலாப்பழத்தில் நிறைந்திருக்கும் பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், இதை ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
- ஏற்கனவே சொன்னது போல பலாப்பழத்தில் நிறைந்துள்ள அதிக நார்ச்சத்து, செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தி மலச்சிக்கலை தடுக்க உதவும்.
சர்க்கரை நோயாளிகள் பலாப்பழம் சாப்பிடும் போது கவனிக்க வேண்டியவை:
எந்த ஒரு உணவையும் போலவே பலாப்பழத்தையும் விதமாகவே சாப்பிட வேண்டும். இதை அதிக அளவு சாப்பிடுவது ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கக்கூடும். எப்போதுமே முழுமையாக பழுத்த பலாப்பழத்தை சாப்பிடுங்கள். பழுக்காத பலாப்பழத்தில், ரத்த சர்க்கரையை விரைவாக உயர்த்தும் கூறுகள் இருப்பதால், அது விரைவாக உங்களது ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்க வழிவகுக்கும்.
கடைகளில் வாங்கும் சில பலாப்பழங்களில் கூடுதலாக சர்க்கரைகள் சேர்க்கப்பட்டிருக்கலாம். அத்தகைய சர்க்கரை சேர்க்கப்பட்ட பழங்களை நீரிழிவு நோயாளிகள் உண்பதைத் தவிர்ப்பது நல்லது. என்னதான் சர்க்கரை நோயாளிகள் பலாப்பழம் சாப்பிடலாம் என்றாலும், அதை மிதமாக உட்கொள்வது நல்லது. எனவே இதை கருத்தில் கொண்டு, எந்த உணவையும் சரியான முறையில் எடுத்துக் கொள்ளுங்கள்.